சூதாட்டத் தளம் ஒன்றை விளம்பரப்படுத்திய யூடியூப் விளம்பரத்தில் இடம்பெற்றதை அடுத்து, உள்ளூர் நடிகரான ஹென்றி தியா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தியா சட்டவிரோத சூதாட்டத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவில்லை என்று அந்த விளம்பரத் தயாரிப்பு நிறுவனமான 'கிங் காங் மீடியா புரோடக்ஷன்' கூறியது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் ஷின் மின் செய்தித்தாளிடம் பேசிய நடிகர் தியா, சூதாட்டத்தின் கொடுமைகள் பற்றித் தமக்கு தெரியும் என்றும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்று மற்றவர்களை ஃபேஸ்புக்கில் தாம் அடிக்கடி எச்சரிப்பது உண்டு என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் புலன்விசாரணை நடந்து வருகிறது.


