காணாமற்போன இளையர் குறித்து தகவல் தர காவல்துறை கோரிக்கை

காணாமற்போன இளையர் குறித்து தகவல் தர காவல்துறை கோரிக்கை

1 mins read
96e67494-b42c-41aa-8730-59a6cd1c036e
19 வயது முகமது ஃபரீட் கேப் அன்ட்ரெய். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

காவல்துறை அதிகாரிகள், 19 வயது முகமது ஃபரீட் கேப் அன்ட்ரெய் குறித்து தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெம்பனிஸ் அவென்யூ 4ல் உள்ள புளோக் 807இல் மார்ச் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கடைசியாக திரு ஃபரீட் காணப்பட்டார்.

அவர் பேய்ஜ் நிற டீ சட்டையும் பெர்முடா அரைக்கால்சட்டையும் கறுப்பு செருப்பும் அணிந்திருந்தார்.

காணாமற்போன இளையர் குறித்து தகவலறிந்தோர் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

தகவல் அளிப்போரின் தனிப்பட்ட விவரங்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருப்பர்.

குறிப்புச் சொற்கள்