காவல்துறை உயரதிகாரி ஒருவர் மீது மதுபோதையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெம்பனிஸ் அவென்யூ 5ல் நடந்ததாக சொல்லப்படுகிறது.
சான் ஹீ கியோங் என்ற அந்த நபர், 51, பிடோக் நார்த், துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை ஆகிய இடங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் தமது காரை நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை பாதுகாப்புத் தளபத்தியத்தில், நடவடிக்கை, உளவுப் பிரிவின் தலைவர் பொறுப்பில் உள்ள திரு சான் மீது, வியாழக்கிழமை (பிப்ரவரி 6ஆம் தேதி) மதுபோதையில் கார் ஓட்டியது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு இரவு கிட்டத்தட்ட 11.40 மணிக்கு அவர் பிடோக் ஸ்திரீட் 1ன் புளோக் 218 அருகில் உள்ள சாலைச் சந்திப்பில் காரை நிறுத்தி வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சாலையில் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அவர் நடந்துகொண்டதாக அவர் மீதான குற்றச்சாட்டு கூறுகிறது.