சிலேத்தாரில் விபத்தில் ஓட்டுநர் காயம்

சிலேத்தாரில் விபத்தில் ஓட்டுநர் காயம்

1 mins read
c01b5585-92d1-4971-b58a-0a489b50dc6c
சிலேத்தார் விமான நிலையம் அருகே கார் ஒன்று கட்டுமானத் தடுப்பின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் காயமடைந்தார். - படம்:கூகல் வரைப்படம்

சிலேத்தார் விமான நிலையம் அருகே கார் ஒன்று கட்டுமானத் தடுப்பின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். அவருக்கு வயது 46. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நடந்தது.

சிலேத்தார் நார்த் லிங்க் சாலை நோக்கிச் செல்லும் பொங்கோல் பாராட் டிரைவில் விபத்து ஏற்பட்டிருப்பதாக திங்கட்கிழமை காலை 3.14 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

காயமடைந்தவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போது அவர் சுயநினைவோடுதான் இருந்தார் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சில்வர் நிற ஹோண்டா ஒடிசி கார் ஒன்று போக்குவரத்துச் சந்திப்பில் சிவப்புநிற விளக்கு எரிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் முன்னோக்கி நகர்வதை சிங்கப்பூர் ரோடு விஜிலன்ட் தனது ஃபேஸ்புக் குழுவில் பதிவிட்டிருந்தக் காணொளியில் காண முடிந்தது. விபத்துக்குமுன் கார் சறுக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகாயம்