ஜூரோங் தீவில் புதிய குளம்

ஜூரோங் தீவில் புதிய குளம்

1 mins read
951d3e1c-f5ab-498e-aaf0-2860c1557ad5
படம்: ஜூரோங் நகராண்மைக் கழகம் -

ஜூரோங் தீவில் 50 ஒலிம்பிக் போட்டி நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிலான மழைநீரைக் கொள்ளும் வகையில் புதிய ஒரு குளத்தை ஜூரோங் நகராண்மைக் கழகம் உருவாக்கி இருக்கிறது.

இதன்மூலம் பருவநிலை மாற்றம் சார்ந்த வெள்ளம் ஏற்படாதபடி அப்பகுதி பாதுகாக்கப்படும்.

நீர் ஊடுருவும் தன்மைகொண்ட மணற்பரப்பிற்குமேல் அந்தக் குளம் வெட்டப்பட்டுள்ளது. கடும் புயலால் பொழியும் மழைநீரானது அந்த 8.9 ஹெக்டர் பரப்பளவிலான குளத்திற்குச் செல்லும்.

பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வுகாணும் விதமாக சிங்கப்பூரில் முதன்முறையாக இத்தகைய அளவில் குளம் வெட்டப்பட்டுள்ளது.