‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுச் சிறை

‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுச் சிறை

1 mins read
a5eb852a-9748-4ca1-9de7-aecf53c5c181
அனிஷா புத்ரி என்ற 47 வயது இந்தோனீசியப் பெண், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தன் தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க ‘பொன்ஸி’ திட்டம் மூலமும் கைப்பைத் தொழில் மூலமும் $6 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிய பெண்ணுக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) பத்து ஆண்டு, இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அனிஷா புத்ரி என்ற அந்த 47 வயது இந்தோனீசியப் பெண், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2011ல் இந்தோனீசியாவின் பாலி, லொம்போக் தீவுகளில் கட்டுமானத் தொழில் நடத்திய அவர், நில முதலீட்டுத் திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பங்கு லாபம் தருவதாக உறுதியளித்து முதலீட்டாளர்களை நம்பவைத்தார்.

ஆனால், 2018ல் லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிலங்களின் விலை சரிந்ததால் அனிஷாவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால், புதிய முதலீட்டாளர்களின் பணத்தைப் பழைய முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தியதுடன் சொந்தச் செலவுகளுக்கும் அவர் அதைப் பயன்படுத்தினார்.

ஏலன் என்பவர் $2.6 மில்லியனுக்குமேல் முதலீடு செய்து அனிஷாவிடம் ஏமாறினார். 2020ல் அவர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அனிஷா அவருக்கு $129,000ஐத் திரும்பத் தந்தார்.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையிலும், நில முதலீட்டுப் பணத்தைக் கொண்டு ‘கேரொசெல்’ தளத்தில் 30 ‘ஹெர்மிஸ்’ கைப்பைகளுக்காக கிளரைன் என்பவரிடம் $683,200ஐப் பெற்றுக்கொண்டு அனிஷா ஏமாற்றினார். பணத்தைத் திரும்பக் கேட்டு கிளரைன் அனுப்பிய குறுஞ்செய்திகளை அவர் புறக்கணித்தார்.

பேராசையாலும் தன்னலத்தாலும் இக்குற்றங்களைப் புரிந்த அனிஷாவுக்கு 11.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க அரசு வழக்கறிஞர்கள் கோரினர்.

குறிப்புச் சொற்கள்