சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அமைப்பின் இயக்குநராக சேவையாற்றும் பூஜா நான்சி, 41, அந்தப் பொறுப்பில் தொடர்வார் என்று ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட் நிறுவனம் நேற்று அறிவித்தது.
இதனிடையே, அறிக்கை ஒன்றை வெளியிட்ட நான்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் எழுத்தாளர் விழா அமைப்பின் இயக்குநராகச் சேவையாற்றியது தனக்குப் பெருமையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
திருவாட்டி நான்சி, அந்தப் பொறுப்பை 2019ல் இயோவ் காய் சாயிடம் இருந்து ஏற்றார். அதன்மூலம் அவர் எழுத்தாளர் விழா அமைப்பின் மூன்றாவது இயக்குநராகவும் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாகவும் ஆனார்.
எழுத்தாளர் விழா அமைப்பு 2010ல் உருவாக்கப்பட்டது. தேசிய கலை மன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டு ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அது, உள்ளூர், அனைத்துலக இலக்கிய புலமையாளர்களை ஒருங்கே கொணர்ந்து அவர்கள் பயிலரங்குகளிலும் குழு விவாதங்களிலும் விரிவுரைகளிலும் பங்கேற்குமாறு செய்கிறது.

