சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு

1 mins read
eafd77d2-2a8e-41b0-8fbc-ce1dbe16490b
புகைமூட்டமாகக் காணப்படும் சரவாக் தலைநகர் குச்சிங். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

வட்டாரத்தில் வரும் வாரம் வறண்ட வானிலை தொடர்ந்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து எறிந்தாலும் சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை காரணமாக சில இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இந்தோனீசியாவின் சுமத்ரா, கலிமந்தான் ஆகிய பகுதிகளில் புகைமூட்டமாக இருந்துவருகிறது. அதனால் காற்று வீசும் திசை காரணமாகப் புகை சிங்கப்பூரை நோக்கி வரக்கூடும். குறிப்பாக சுமத்ராவின் தென் பகுதிகளிலிருந்து புகை சிங்கப்பூருக்குத் தள்ளப்படக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

வரும் வாரமும் வறண்ட வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காட்டுத்தீ தொடர்ந்து எறிந்தால் சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று வாரியம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) அறிக்கை மூலம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி மத்திய சிங்கப்பூரில் பிஎஸ்ஐ குறியீடு 81ஆகப் பதிவானது. இது, நடுத்தர குறியீட்டு நிலையாகும்.

புகைமூட்ட நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் நிலைமை மாறினால் கூடுதல் தகவல்கள் அளிக்கப்படும் என்றும் வாரியம் குறிப்பிட்டது.

பிஎஸ்ஐ குறியீடு சுகாதாரமற்ற நிலையை எட்டினால் தேசிய சுற்றுப்புற வாரியம் நாள்தோறும் புகைமூட்டம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாபுகைமூட்டம்காட்டுத்தீவானிலை