மின் கோளாற்றால் வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

மின் கோளாற்றால் வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

1 mins read
71fed2be-13c1-4dc6-a42e-f9f3d2a9560e
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, சுவா சூ காங்கிற்கும் உட்லண்ட்சுக்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. - படம்: டிலன் குவெக்/ஃபேஸ்புக்

வடக்கு-தெற்கு தடத்தில் ஜூன் 3ஆம் தேதி உச்ச நேரத்தில் ரயில் சேவை தடைபட்டது. மின்கோளாறு இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் இது குறித்து மாலை 6.08மணிக்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இயூ டீ ரயில் நிலையம் முதல் உட்லண்ட்ஸ் வரை ரயில்கள் சேவை வழங்கமாட்டா என்று அது குறிப்பிட்டது. இவ்விரு நிலையங்களுக்கும் இடையே கிராஞ்சி, மார்சிலிங் ஆகிய நிலையங்கள் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, சுவா சூ காங்கிற்கும் உட்லண்ட்சுக்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் மாலை 6.36 மணிக்கு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பயணிகள் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை அல்லது வட்டப் பாதையைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்களில், பாதிக்கப்பட்ட நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் கூட்டமாகக் காத்திருப்பதைக் காண முடிகிறது.

குறிப்புச் சொற்கள்