எந்நேரமும் சிங்கப்பூரர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் என்றும் பிராட்டாவுக்குத் தனி இடம் உள்ளது.
அதைத் தான் அண்மைய அறிக்கை ஒன்றும் தெரிவிக்கிறது.
உணவு விநியோகத் தளமான கிராப் தளத்தில் சிங்கப்பூரர்கள் கடைகளிலிருந்து அதிகம் வாங்கிய உணவுகளில் பிராட்டா முக்கிய இடம்பிடித்திருக்கிறது.
காலை, மதியம், இரவு என எந்த நேரமானாலும் அதிகம் விநியோகிக்கப்பட்ட உணவு வகைகளின் பட்டியலில் பிராட்டா மூன்றாவது இடத்தில் இருந்தது. 2021 பட்டியலில் பிராட்டா இரண்டாவது இடத்தில் இருந்தது. முதல் இடத்தில் கோலோச்சுவது பர்கர் உணவுகள்தாம்.
இரவு உணவைப் பொறுத்தவரை, கிராப் தளத்தில் அதிகம் விநியோகிக்கப்பட்டது இந்திய உணவான பூண்டு நாண்.
அது மட்டுமல்ல, கிராப் தளத்தில் நான்காவது அதிகம் தேட்டப்பட்ட உணவு இந்திய உணவு. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய உணவு வகைகள் நான்காவது இடத்தில் உள்ளன.
இவ்வாண்டு கிராப் தளத்தில் அதிகம் தேடப்பட்ட உணவு வகை சைவ உணவு வகைதான். கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கொரிய உணவை அது மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது.