'இனி விமானங்களில் இறால் இல்லை' செலவைக் குறைக்கும் நிறுவனம்

'இனி விமானங்களில் இறால் இல்லை' செலவைக் குறைக்கும் நிறுவனம்

1 mins read
5082c5c2-b0a6-4e0e-a868-3071c8a797dc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமானங்களில் வழங்கப்படும் உணவுகளின் விலையைக் குறைக்க இறாலுக்குப் பதில் கோழியைக் கொடுக்கவுள்ளது சேட்ஸ் (Sats) நிறுவனம்.

விமான நிறுவனங்களுக்கு உணவுகளை வழங்கும் பெரும் நிறுவனங்களில் சேட்ஸ் நிறுவனமும் ஒன்று.

கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்களில் விமானச் சேவையும் அடங்கும். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

இந்நிலையில் உணவுகளின் விலையைக் குறைப்பதும் அதே நேரம் அதற்கு ஏற்ப உணவில் புரதத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக சேட்ஸ் தெரிவித்தது.

சேட்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 49.1 மில்லியன் உணவுப் பொட்டலங்களை விமானங்களில் தந்துள்ளது.