ஆக்கபூர்வ மனநலன் கொண்டுள்ள தாய்மாரால் பாலர் பருவப் பிள்ளைகளுக்குப் பயன்: ஆய்வு

ஆக்கபூர்வ மனநலன் கொண்டுள்ள தாய்மாரால் பாலர் பருவப் பிள்ளைகளுக்குப் பயன்: ஆய்வு

2 mins read
9b492fc3-9d88-4e03-8da2-e6ba06a72de4
ஆக்கபூர்வமான மனநலன் கொண்டுள்ள தாய்மார் மேலும் ஆரோக்கியமான பிள்ளைவளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆக்கபூர்வமான மனநலனைக் கொண்டுள்ள தாய்மார், வரையறைகளை வகுப்பது, தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் ஆரோக்கியமான பிள்ளைவளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதாகச் சிங்கப்பூர் ஆய்வு ஒன்று கூறுகிறது.

பிள்ளைவளர்ப்பில் அத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால், பாலர்பள்ளிப் பிள்ளைகளிடையே மேலும் வலுவான அறிவாற்றல் வளர்ச்சி காணப்படுவதாக அது தெரிவித்தது.

ஆரோக்கியமற்ற மனநலன் உள்ள தாய்மார் மேலும் கடுமையான அல்லது மேலும் கடுமையற்ற பிள்ளைவளர்ப்பு முறையைக் கடைப்பிடிப்பதாக ஆய்வு காட்டியது. அத்தகைய முறைகளில் வளர்க்கப்படும் பாலர்பள்ளிப் பிள்ளைகளிடையே கூடுதலான நடத்தைப் பிரச்சினைகள் உள்ளதை ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

அதிகாரம் செலுத்துபவர்களாக மட்டும் அல்லாமல், தாங்கள் வைக்கும் ஒவ்வொரு விதிக்கும் விளக்கம் அளிக்கும் பெற்றோரைக் கொண்டுள்ள மேலும் கடுமையான வளர்ப்பு முறையிலிருந்து வரும் குழந்தைகளுக்குக் குறைவான நடத்தைப் பிரச்சினைகள் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.

ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கமுடியாதது அல்லது மற்ற குழந்தைகளுடன் பழகிப் புதிய நண்பர்களைப் பெற்றுக்கொள்ள முடியாதது போன்றவை நடத்தைப் பிரச்சினைகளில் சில.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ள தாயாருக்குச் சிகிச்சை வழங்குவதால் அவருடைய மனநலன் மேம்படும் என்று அர்த்தமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

‘ஏஸ்டார்’ அமைப்பு நடத்திய அந்த ஆய்வின் மூலம் கிடைத்த கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, தாய்மார் இடையே ஆக்கபூர்வமான மனநலனைத் துடிப்பாக ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதைத் தாண்டி பொதுச் சுகாதாரத் திட்டங்கள் செயல்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யொங் லூ லின் மருத்துவப் பள்ளியுடனும் கே கே மகளிர் சிறார் மருத்துவமனையுடனும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், 328 தாய்-பிள்ளை இணையர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அந்த ஆய்வில் தந்தையர் குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெறாவிட்டாலும், பிள்ளைவளர்ப்பில் ஆண்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளதாக ஆய்வின் தலைமை ஆய்வாளரான டாக்டர் மிஷெல் கீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்