பாலர் பள்ளி மற்றும் மாணவர் பராமரிப்பு மானியங்கள் உயர்வு

பாலர் பள்ளி மற்றும் மாணவர் பராமரிப்பு மானியங்கள் உயர்வு

2 mins read
6faf314d-26cd-4d64-8c1a-a2f14d1d6eeb
தன் மூத்த மகள் ஷனன்யாவுக்கு சுமன் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க, அவரது மனைவி புவனேஸ்வரி கைக்குழந்தை ஆஹானாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். - படம்: தமிழ் முரசு

பாலர் பள்ளி பிள்ளைகளுக்கான மானியம் மேம்படுத்தப்படுகிறது. மானியத்திற்குத் தகுதி பெரும் குடும்ப வருமானம் 12,000 வெள்ளியிருந்து 15,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுவது அந்த மேம்பாடுகளில் ஒன்று.

இதன்மூலம், பாலர் பள்ளி செல்லும் பிள்ளைகள் கொண்ட 60,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என திரு லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.  

பாலர் பள்ளி, மாணவர் பராமரிப்புச் சேவைகளுக்கான கட்டணங்கள் தொடர்ந்து கட்டுப்படியாக இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என திரு வோங் உறுதியளித்தார்.

பாலர் பள்ளிக் கட்டணங்களை நிலையாக வைத்திருப்பதுடன் சலுகைகளையும் அரசாங்கம் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

தற்போது இரட்டை வருமானக் குடும்பங்களின் குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் தொடக்கப்பள்ளிக் கட்டணங்களோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளன. 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் செலவுகளைக் கையாள, பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்.

தரமான ஆரம்பகாலக் கல்வியையும், பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பையும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 73,000 குடும்பங்கள் பயனடைவர்.

இந்த மேம்பாட்டின் ஒரு பகுதியாக, மானியம் பெறுவதற்கான தகுதியுள்ள மாத வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வருமானக் குடும்பங்கள் கூடுதல் நன்மையைப் பெறுவர்.

குழந்தைப் பராமரிப்பு மானியதிற்கான மொத்த குடும்ப வருமான உச்சவரம்பு 12,000 வெள்ளியிலிருந்து 15,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் வரம்பு 3,000 வெளியிலிருந்து 3,400 வெள்ளியாக அதிகரித்துள்ளது.

பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டத்தின்கீழ் (KiFAS) பிரதான நடத்துநர்கள் (Anchor Operators) கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பும் 15,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

• மாணவர் பராமரிப்புக் கட்டண உதவிக்கான  (SCFA) வருமான வரம்பு $4,500லிருந்து $6,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இது பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அதிக மானியம் கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் சுமையைக் குறைக்க இந்த மாற்றங்கள் வகை செய்கின்றன. 

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை, குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

குறிப்புச் சொற்கள்