தேசிய தின அணிவகுப்பு நிகழ்வுகள் நிறைவடையும் தறுவாயில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் உரையாடினார்.
நிகழ்ச்சிகளில் நடனமாடிய சிறார்கள் முதல் உதயசௌந்தரி, குர்மித் சிங் உள்ளிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், பாடகி சுஷ்மா சோமா, நடனக் கலைஞர் ஷ்ருதி நாயர் என்று பலருடன் அதிபர் கைகுலுக்கி நன்றி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியை, ஆசியான் காற்பந்துக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்த அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெவின் லீயுடனும் அவர் சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அதிபர் அனைவருடனும் சேர்ந்து தம்படம் எடுத்துக்கொண்டார்.


