‘எஸ்யுடிடி’ பல்கலைக்கழக வேந்தராக அதிபர் தர்மன்

‘எஸ்யுடிடி’ பல்கலைக்கழக வேந்தராக அதிபர் தர்மன்

1 mins read
b0a77210-64ad-4823-832d-485ff1cff553
2009ல் நிறுவப்பட்டதிலிருந்து, பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வேந்தராக பொறுப்பேற்று உள்ளார், அதிபர் தர்மன் சண்முகரத்னம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், ஜூலை 1ஆம் தேதி அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை அதன் வேந்தராக அறிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வேந்தராக அவர் பொறுப்பேற்று உள்ளார்.

2009 முதல் 2012 வரை, காலஞ்சென்ற முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் அதன் முதல் வேந்தராகப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, 2012 முதல் 2022 வரை, முன்னாள் அதிபர் டோனி டான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பள்ளியின் கட்டமைப்பில் வேந்தர் முக்கியப் பங்கு வகிப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.

பட்டமளிப்பு விழா போன்ற முக்கியமான அதிகாரபூர்வ பல்கலைக்கழகச் சடங்குகளுக்குத் தலைமையேற்பது வேந்தரின் பொறுப்புகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்