லாவோசின் முன்னாள் அதிபர் காம்டே சைஃபாண்டோனின் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆசியானுக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
திரு காம்டே ஏப்ரல் 2ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு காலமானார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், லாவோசின் தற்போதைய அதிபரான தோங்லுவன் சிசோவிலித்துக்கு எழுதிய கடிதத்தில் திரு காம்டே குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டியிருந்ததார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லாவோஸ் மக்கள் குடியரசின் (பிடிஆர்) மையமாகவும் ஆழ்ந்த மரியாதைக்குரிய நபராகவும் இருந்தார் என்று ஏப்ரல் 4ஆம் தேதி எழுதிய கடிதத்தில் திரு தர்மன் குறிப்பிட்டுள்ளார்.
திரு காம்டே, லாவோசின் பிரதமராக 1995ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், ஏப்ரல் 7ஆம் தேதி லாவோஸ் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் திரு காம்டே, லாவோஸ் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த அரசியல்வாதி என்று போற்றியிருந்தார்.
“அதிபர் காம்டே சிங்கப்பூரின் நல்ல நண்பர். லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வலுவான நட்பை ஏற்படுத்துவதில் அவர் தனிப்பட்ட பங்கை ஆற்றினார்,” என்று பிரதமர் வோங் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று நமது நாடுகள் அனுபவிக்கும் சிறந்த உறவுகளுக்கு திரு. காம்டேயின் கடின உழைப்பு அடித்தளமாக இருந்தது,” என்று திரு வோங் மேலும் தெரிவித்திருந்தார்.