சிங்கப்பூரின் இந்தியச் சமூகங்கள் அனைத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துகளை அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களுக்கானப் புத்தாண்டு, மலையாளிகளுக்கான விஷு, சீக்கியர்களுக்கான வைஷாக்கி எனப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இந்தியர்கள் இந்தக் காலகட்டத்தைக் கொண்டாடி வருவதாக அதிபர் தர்மன் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார்.
தமிழர்கள் விரும்பிப் பருகும் ரசத்தைப் பற்றியும் பதிவிட்ட அதிபர் தர்மன், அதில் காரமும் புளிப்பும் நிறைந்திருப்பதாகக் கூறினார்.
ரசத்தைத் தனியாக, பானம் போல அருந்தலாம். அல்லது வெறும் சோற்றுடன் சாப்பிடலாம், என்று அவர் கூறினார்.
இதத்தை உணர்வதற்காக இந்தியர்கள் உட்கொள்ளும் உணவான ரசம், சளித் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கும் உதவும் என்று அதிபர் கூறினார்.
பிரிட்டிஷ் மக்கள் உள்கொள்ளும் மளிகைத்தண்ணி பதார்த்தம், ரசத்திலிருந்து தோன்றியது என பலருக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
“தமிழருக்கு உரித்தானது ரசம் என்றாலும் தென்னிந்தியாவில் ரசத்தைப் போன்ற, வெவ்வேறு தாளிப்புப் பொருட்களின் அளவு கொண்ட வடிவங்கள் உள்ளன.”
தொடர்புடைய செய்திகள்
அதனைப் பிரிட்டிஷ் மக்கள் சூப்பைப் போல தயாரித்தாலும் அதனைக் காட்டிலும் ரசம்தான் பிடிக்கும் என்றார் அதிபர்!