அதிபர் தேர்தல்: 2.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி

அதிபர் தேர்தல்: 2.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி

1 mins read
c4bbdd54-f166-4f37-bb8b-8c49d21b575c
தகுதிபெறும் வாக்காளர்கள் பதிவேடுகளில் உள்ள தங்கள் விவரங்களைத் தேர்தல் துறை இணையத்தளத்தில் அல்லது சிங்பாஸ் செயலியில் சரிபார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாக்காளர் பதிவேடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அது வெள்ளிக்கிழமையிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் தேர்தல் துறை கூறியுள்ளது.

ஆக அண்மைய வாக்காளர் பதிவேட்டில், மொத்தம் 2,709,455 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது 2020ஆம் ஆண்டில் கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இருந்த 2,653,942 வாக்காளர்களைக் காட்டிலும் ஏறக்குறைய 55,000க்கும் அதிகம்.

தகுதிபெறும் வாக்காளர்கள் பதிவேடுகளில் உள்ள தங்கள் விவரங்களை eld.gov.sg எனும் தேர்தல் துறை இணையத்தளத்தில் அல்லது சிங்பாஸ் செயலியில் சரிபார்க்கலாம்.

இணையம் வழியாகச் சரிபார்க்க முடியாதவர்கள் சமூக நிலையங்களுக்கு, சமூக மன்றங்களுக்கு அல்லது சர்விஸ்எஸ்ஜி நிலையங்களுக்குச் செல்லலாம். அவர்கள் தேர்தல் துறை இணையத்தளத்திற்குச் சென்று அல்லது 1800-225-5353 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்த பிறகு நொவீனாவில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்திற்கும் செல்லலாம்.

இதற்கிடையே, முன்னைய தேர்தலில் வாக்களிக்க தவறியதற்காகப் பதிவேடுகளிலிருந்து அகற்றப்பட்டோர், தேர்தல் துறை இணையத்தளம்வழி மீண்டும் தங்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். அப்போதுதான் அவர்கள் எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க முடியும்.

தேர்தலை நடத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக மூவர் அறிவித்துள்ளனர். அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சொங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தொழிலதிபர் ஜார்ஜ் கோ ஆகியோரே அவர்கள்.

குறிப்புச் சொற்கள்