சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு, அதிபர் சவாலுக்காக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் $2.3 மில்லியன் திரட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) விக்டோரியா கலையரங்கத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கான நன்கொடை, நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் இத்தொகை பெறப்பட்டது.
வூல்ஃப்கேங் வயலின் ஸ்டூடியோ சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்குத் தேவையான நிதியைத் திரட்ட அதிபர் சவால் உதவுகிறது.
‘SG60 Celebrate! Honour the Past, Inspire the Future’ எனும் தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் 60 பேரைக் கொண்ட இளம் இசைக்கலைஞர்கள் பங்கெடுத்தனர்.
3 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட இசைக்கலைஞர்கள் வயலின், வயோலா, செலோ ஆகிய இசைக்கருவிகளை வாசித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கலைநிகழ்ச்சியை 660 பேர் கண்டுகளித்தனர்.