தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோஜெக், கிராப், ஜிக், டடா கட்டணம் உயர்வு

3 mins read
cfec002f-4e8b-4bb2-8733-411da10f60e5
கிராப், கோஜெக், டடா, ஜிக் ஆகியவை ஜனவரி 1ஆம் தேதி முதல் அதன் சேவையில் கூடுதலாக 50 காசு வரையிலான கட்டணங்களை வசூலிக்கவுள்ளன. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், டடா

வாடகை கார் சேவைகளை வழங்கும் கோஜெக், கிராப், ஜிக், டடா ஆகியவை அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 50 காசு வரையிலான கட்டணங்களை வசூலிக்கவுள்ளன.

இணையவழி ஊழியர்கள் சட்டம் நடப்புக்கு வரலாம் என்பதால் அதன்மூலம் ஏற்படும் செலவுகளை சமாளிக்க மூன்று நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக கூறுகின்றன.

சிங்கப்பூரில் இரண்டாவது ஆக அதிக வாடகை கார் சேவைகளை வழங்கும் கோஜெக் நிறுவனம் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு பயணத்திற்கும் செயல்பாட்டுக் கட்டணமாக 30 முதல் 50 காசு வரை உயர்த்துகின்றன.

தற்போது கோஜெக் ஒவ்வொரு பயணத்திற்கும் செயல்பாடு கட்டணமாக 60 காசு முதல் 1 வெள்ளி கட்டணம் வசூலிக்கிறது. அது அடுத்த ஆண்டு முதல், 90 காசு முதல் 1.50 வெள்ளியாக மாறும்.

கம்போர்ட் டெல்குரோவின் ஜிக் அதன் செயல்பாட்டுக் கட்டணத்தை 30 முதல் 50 காசு வரை உயர்த்துகிறது. தற்போது அது 70 காசாக மட்டும் இருந்தது. அது அடுத்தாண்டு முதல் 1 வெள்ளி முதல் 1.20 வெள்ளி வரை மாற்றம் காண்கிறது.

பயணம் செய்யும் தூரம் பயண நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கம்போர்ட் டெல்குரோ தெரிவித்தது.

டடாவும் அதன் சேவை விலையில் 50 காசு வரை உயர்த்துவதாக மின்னஞ்சல் வழி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தது.

தற்போது டடாவின் ஒவ்வொரு பயணத்திற்கும் செயல்பாட்டுக் கட்டணமாக 55 காசு முதல் 75 காசு வரை அந்நிறுவனம் வசூலிக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் பொருள் சேவை வரி சேர்க்கப்படாமல் டடாவின் அந்தக் கட்டணம் 1.05 வெள்ளி முதல் 1.25 வெள்ளியாக இருக்கும்.

நான்கு நிறுவனங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல், இணையத்தளம், செயலி ஆகியவற்றின் மூலம் தகவல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரின் ஆகப் பெரிய வாடகை கார் சேவையை வழங்கும் கிராப் நிறுவனம் அதன் செயல்பாட்டுக் கட்டணத்தை 20 காசு உயர்த்தியுள்ளது. தற்போது அது 70 காசாக உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு பயணத்திற்கும் செயல்பாட்டுக் கட்டணம் 90 காசாகச் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு புதிய தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள் சேவை வழங்கவுள்ளன.

டிரான்ஸ் கேப் சர்வீஸ், ஜியோ லா ஆகிய நிறுவனங்களுக்கு அந்த உரிமம் வழங்கியுள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம்.

சிங்கப்பூரில் மூன்றாவது பெரிய டாக்சி சேவையை வழங்கும் டிரான்ஸ் கேப்பிடம் 2,079 வாகனங்கள் உள்ளன. ஜியோ லா நிறுவனம் கைப்பேசிச் செயலி வழி சொகுசு கார் சேவை மற்றும் பொட்டலங்கள் விநியோகம் ஆகியவற்றில் உள்ளது.

சிங்கப்பூரில் ஏற்கெனவே கிராப், ரைட், டடா, கோஜெக், ஜிக் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார் சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும் இந்நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உரிமங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் புதுப்பித்துள்ளது.

புதிய உரிமம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்