தொழில்துறை இடங்களுக்கான வாடகை, விலை அதிகரிப்பு

2 mins read
bf31bfe8-e7eb-42e5-9873-b9fc35abbde3
தொழில்துறை இடங்களின் பயன்பாட்டு அளவு இரண்டாம் காலாண்டில், 0.3% உயர்ந்து 89 விழுக்காடாக இருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் தொழில்துறை இடங்களுக்கான விலையும் வாடகையும் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உயர்ந்துள்ளன. எனினும், வாடகை தொடர்ந்து உயர்ந்து வந்தபோதும், வாடகை வளர்ச்சி மெதுவடைந்துள்ளது என்று வியாழக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்பட்ட ஜூரோங் நகர மன்றத்தின் காலாண்டு சந்தை நிலவர அறிக்கை குறிப்பிட்டது.

தொழில்துறை வாடகை காலாண்டு அடிப்படையில் இரண்டாம் காலாண்டில் 1 விழுக்காடும் முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிட 6.6 விழுக்காடும் அதிகரித்துள்ளது. காலாண்டு அதிகரிப்பின் வளர்ச்சி முதல் காலாண்டில் 1.7 விழுக்காடாக இருந்தது.

பல்வேறு இடங்களில் அடிப்படையில், பல பயன்பாட்டாளர் தொழிற்சாலை 2ஆம் காலாண்டில் 1.5 விழுக்காடாக அதிக வாடகை உயர்வைக் கொண்டிருந்தது. ஒற்றைப் பயனர் தொழிற்சாலை இடமும் சேமிப்புக் கிடங்கும் முறையே 1.3 விழுக்காடு, 0.5 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தன.

இதற்கிடையில், தொழில் பேட்டை இடத்திற்கான வாடகைக் குறியீடு 2024 முதல் காலாண்டின் 22%, 2023 இறுதிக் காலாண்டின் 21.6% காலியிடத்துடன் ஒப்பிட இரண்டாம் காலாண்டில் 21.7 விழுக்காடு காலியிடத்துடன் 0.1 விழுக்காட்டு சரிவைக் கண்டது.

ஆண்டு அடிப்படையில் பல பயன்பாட்டாளர் தொழிற்சாலை வாடகை அதிக வாடகை உயர்வான 7.3 விழுக்காட்டைப் பதிவு செய்தது. சேமிப்புக் கிடங்கு வாடகை 6.6 விழுக்காடு உயர்ந்தது. ஒற்றைப் பயனர் தொழிற்சாலை இடங்கள் 6.2 விழுக்காடும், தொழில் பேட்டை வாடகை 3.5 விழுக்காடும் அதிகரித்தன.

தொழில்துறை இடத்திற்கான விலை காலாண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடும் ஆண்டு அடிப்படையில் 3 விழுக்காடும் அதிகரித்தன. பல பயனர், ஒற்றைப் பயனர் தொழிற்சாலை விலை இரண்டாம் காலாண்டில் முறையே 1.7 விழுக்காடும் 0.3 விழுக்காடும் உயர்ந்தன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பல பயன்பாட்டாளர் தொழிற்சாலை விலை 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒற்றைப் பயனர் தொழிற்சாலை விலை 0.3 விழுக்காடு கூடியுள்ளது.

புதிய தேவைகள் விநியோகத்தைவிட அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதம் முந்தைய காலாண்டைவிட 0.3 விழுக்காடு அதிகரித்து 89 விழுக்காடாக இருந்தது. முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 0.2 முதல் 0.8 விழுக்காடு புள்ளிகள் வரை அனைத்து சொத்து பிரிவுகளிலும் பயன்பாடு கூடியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

எனினும், மொத்த இடவசதி 600,000 சதுர மீட்டர் அதிகரித்துள்ளதால், ஆண்டு அடிப்படையில் பயன்பாட்டு அளவு 0.1 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. 2024ன் இரண்டாம் காலாண்டு முடிவில், உள்ள மொத்த தொழில்துறை இடத்தின் அளவு 53.1 மில்லியன் சதுர மீட்டர் ஆகும்.

பரிவர்த்தனை அளவு ஆண்டு அடிப்படையில் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொழில்துறை சொத்துக்களுக்காக செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்