தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களைச் சந்தித்து இளமைக்கால நினைவுகளில் திளைத்த பிரதமர் வோங்

2 mins read
17d87d2e-a2fb-4b1a-94dc-404f8d7fb28e
சாங்கி சீமெய் சமூக மன்றத்திற்கு டிசம்பர் 14ஆம் தேதி வருகை தந்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 3

சிக்கலான காலகட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ள சிங்கப்பூருக்கு, சமூக உணர்வு முக்கியம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

‘பிடோக் குடியிருப்பு வட்டாரப் பாதுகாப்பு விழா’வுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முன்னறிவிப்பின்றி வருகை தந்த திரு வோங் இவ்வாறு கூறினார்.

“செய்திகளைப் படிக்கும்போதே நமது உலகில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். மேலும் சிக்கலானதாக உலகம் மாறி வருகிறது. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் போர்கள், வாழ்க்கைச் செலவினத்தால் உலகெங்கும் அழுத்தம், மேலும் பிளவுபடும் சமுதாயம், சரிந்து வரும் நம்பிக்கை,” என்று சுட்டினார் அவர்.

இத்தகைய கவலை நிறைந்த உலகில் சிங்கப்பூர் ஓர் ஒளிவிளக்காக, சவால்களை எதிர்கொள்ள ஒன்றுதிரண்டு எழலாம் என்றார் திரு வோங்.

“நம்மால் உறுதியாக, பாதுகாப்பாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்க முடியும்,” என்று நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங் குறிப்பிட்டார்.

அவருடன் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெசிக்கா டான், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திருவாட்டி ஷெரில் சான் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரின் வெவ்வேறு குழுத்தொகுதிகளுக்குச் சென்றுவரும் திரு வோங், தமது இளமைக்கால நினைவுகளில் திளைத்தபடி பேசியும் இருந்தார்.

“இங்கு வருவது எனக்கு மீண்டும் வீடு திரும்புவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. மரின் பரேட்டில் நான் வளர்ந்த பகுதிக்கும் இவ்விடத்திற்கும் சிறிது தூரம்தான். நான் சிறுவயதாக இருந்தபோது நான் சென்ற தேவாலயம் அருகே பிடோக் ரோட்டில் உள்ளது,” என நினைவுகூர்ந்தார் அவர்.

தங்களின் அண்டைவீட்டார் மீது அன்பு காட்டியதற்காக நிகழ்வில் பத்து குடியிருப்பாளர்களுக்கு ‘பிடோக் சிறந்த அண்டைவீட்டார் விருது’ வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்