தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘என்யுஎஸ்’ சுற்றிப்பார்க்க கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்

1 mins read
394f89bc-595d-4967-b9e9-a48900c58498
சுற்றுப்பயணிகள் மாணவர் தூதர் அல்லது ஆசிரியர்களுடன் இல்லாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தை (என்யுஎஸ்) ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுப்பயணிகள், சுற்றுலா குழுக்களில் சேர்ந்துகொண்டு அவர்களது பயண நேரத்தையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுப்பயணிகள் மாணவர் தூதர் அல்லது ஆசிரியர்களுடன் இல்லாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்