குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபட்ட பெண்ணுக்குச் சிறைத் தண்டனை

குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபட்ட பெண்ணுக்குச் சிறைத் தண்டனை

2 mins read
57635e16-e183-4c48-bd07-aa60f64499f9
குற்றச்செயல்களில் ஈடுபட்ட (இடது) லிம் சொக் லேய், 54, அவரது மகள் ஜோலின் சியாங் வான் லிங், 29. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் குற்றங்களில் இதற்குமுன் ஈடுபட்ட பெண் ஒருவர் மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

இந்த முறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேரைத் தாக்கியதற்காகவும் ஒரு பள்ளிக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்ப்பரவலின்போது தாதியராகப் பணியாற்றிய அண்டை வீட்டாரை அச்சுறுத்தியதற்காக லிம் சோக் லே என்ற 54 வயதுப் பெண்ணுக்கு 2022ஆம் ஆண்டு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர், 2025ஆம் ஆண்டு தமது மகனின் சிங்க நடனப் போட்டியின்போது சலசலப்பை ஏற்படுத்தியதற்காக அதே பெண்ணுக்கு மீண்டும் $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

லிம், தமது 29 வயது மகள் ஜோலீன் சியாங் வான் லிங்குடன் அண்மையில் சில குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபட்டார்.

இம்மாதம் 17ஆம் தேதி, கைதுசெய்யப்பட்ட லிம், அடுத்தவர்களைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஆறு மாதங்கள், இரண்டு வாரச் சிறைத் தண்டனையை எதிர்நோக்கினார்.

பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருந்ததுடன் வேண்டுமென்றே பாதுகாவல் அதிகாரியைத் தாக்கிய குற்றத்தையும் லிம் ஒப்புக்கொண்டார்.

அடுத்தவர்களைத் தாக்கியது, மிரட்டியது, பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காகச் சியாங்கிற்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் $1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அவரது பிணை $20,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியாங் தமது சிறைத் தண்டனையைச் செப்டம்பர் மாதம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி, ஒன் பொங்கோல் சமூக நடுவத்தில் பாலர் பள்ளி பிள்ளைகளுடன் இருந்த ஆசிரியரைப் பார்த்து லிம்மும் சியாங்கும் கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை என்றபோதும் பொதுமக்கள் ஆசிரியரைப் பாதுகாக்க முன்வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்
குற்றம்பெண்கள்சிறை