மே பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி ஒன்று அல்லது இரண்டு புதிய தொகுதிகளை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தது. மேலும் அது சிறப்பான வெற்றிபெற போதுமானதாக இல்லாவிட்டாலும் அதை நெருங்கி வந்துவிட்டது என்று ஆகஸ்ட் 4ஆம் தேதி அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தார்.
“இது எங்களுக்கு ஒரு கடினமான தேர்தலாக இருந்தது. ஒரு சிறிய அரசியல் கட்சி எக்னற முறையில் உண்மையில் தேர்தல்கள் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம்,” என்று அவர் கிஸ்92எஃப்எம் வானொலியின் ‘த பிக் ஷோ’ நிகழ்ச்சியில் கூறினார்.
பாட்டாளிக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 26 வேட்பாளர்களைக் களமிறக்கியது. அவர்களில் 14 பேர் புதியவர்கள்.
இறுதியில், அக்கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதி, செங்காங் குழுத் தொகுதி மற்றும் ஹவ்காங் தனித் தொகுதி ஆகியவற்றின் மூலம் 10 நாடாளுமன்ற இடங்களை வென்று தனது தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் அது போட்டியிட்ட புதிய தொகுதிகளான பொங்கோல் குழுத் தொகுதி, தெம்பனிஸ் குழுத் தொகுதி, தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி ஆகியவற்றில் கால் பதிக்கத் தவறிவிட்டது.
நிகழ்ச்சியின் நெறியாளர்களான கிளேன் ஓங்கும் ஏஞ்சலின் டியோவும் தேர்தலில் பாட்டாளிக் கட்சி எவ்வாறு செய்தது என்று கேட்டதற்கு, “எங்கள் கட்சி மேலும் ஒன்று அல்லது இரண்டு புதிய தொகுதிகளைக் கைப்பற்ற நம்பிக்கை கொண்டிருந்தது,” என்று திரு பிரித்தம் பதிலளித்தார்.
“நாங்கள் நெருங்கி வந்தோம். ஆனால் போதுமான அளவு நெருங்கவில்லை. அது இன்னும் நாங்கள் செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது என்பதைத்தான் காட்டியது. எனவே மீண்டும் அந்த முயற்சியில் வெற்றி பெற முனைப்புடன் செயல்படுவோம்,” என்று அவர் தனது முதல் வானொலி நேர்காணலில் கூறினார்.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதியில் போட்டியிடாததற்காக பாட்டாளிக் கட்சி, மற்ற எதிர்க்கட்சிகளிடமிருந்தும் விமர்சனங்களைப் பெற்றது. அங்கு அக்கட்சி பல காலமாகச் செயலாற்றி வந்துள்ளது. பாட்டாளிக் கட்சி அக்குழுத் தொகுதியில் போட்டியிடாததால் வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று, மக்கள் செயல் கட்சி எதிர்பாராத வெற்றியைப் பெற வழிவகுத்தது.
எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம், தேர்தல் எல்லைகள் மறுஆய்வுக் குழுவின், எல்லை மாற்றங்களை ஆய்வு செய்த பிறகு, கட்சி தனது உத்தியை மாற்ற முடிவு செய்ததாக வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பொதுத் தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர்களைப் பற்றியும் திரு சிங் பேசினார். அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டதாகத் தான் நினைப்பதாக கூறினார். இருப்பினும் திரு பிரித்தம் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.