பிரித்தம் சிங்கின் தலைமைத்துவ எதிர்காலம்: பாட்டாளிக் கட்சி சந்திப்பு

பிரித்தம் சிங்கின் தலைமைத்துவ எதிர்காலம்: பாட்டாளிக் கட்சி சந்திப்பு

1 mins read
7c589c94-aa7d-4de3-af42-49c81a9402e6
2025 ஏப்ரல் 29ஆம் தேதி பிடோக் அரங்கில் நடைபெற்ற பாட்டாளிக் கட்சியின் பேரணியில் அல்ஜுனிட் குழுத்தொகுதி வேட்பாளரும் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் உரையாற்றினார். - படம்: பெரித்தா ஹரியான்

பாட்டாளிக் கட்சியின் (Workers’ Party) தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங்கின் தொடர்ச்சியான தலைமைத்துவம் குறித்துத் தீர்மானிக்கவுள்ள இரண்டு கூட்டங்களை அக்கட்சியின் மத்திய செயற்குழு நடத்துகிறது.

 ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நண்பகல் 12 மணிக்குச் சிறப்புத் தொண்டர்களுக்கான சந்திப்பு நடைபெறும். அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.

திரு சிங்கின் தலைமையின்மீது அதிருப்தி கொண்ட 25 கட்சித் தொண்டர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் முழுமையாக அவரது தலைமைத்துவத்தைப் பற்றி மட்டுமே விவாதிக்கும்.  நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்ததாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 2025 டிசம்பரில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த நிலையில், அது குறித்துத் திரு சிங், இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.

கட்சியின் விதிமுறைகளை மீறியதற்காகத் திரு சிங், பதவியிலிருந்து விலகுமாறு கேட்கப்படவுள்ளது. திரு சிங் அவ்வாறு செய்ய மறுத்தால் அவர் பதவியில் தொடர்வதா அல்லது விலகுவதா என்பதைத் தீர்மானிக்கத் தொண்டர்கள் வாக்கெடுப்பை நடத்துவார்கள்.

இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிரித்தம் சிங்எதிர்காலம்சந்திப்புபாட்டாளிக் கட்சி