ஊட்ரமில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் (மார்ச் 12) 62 வயது ஓட்டுநர் பலியானார்.
இயு தொங் சென் ஸ்டிரீட்டுக்கும் ஊட்ரம் சாலைக்கும் இடைப்பட்ட சந்திப்பில் கெண்டன்மன்டுக்குச் செல்லும் சாலையில் விபத்து நேர்ந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு விபத்து குறித்து காலை 11.20 மணியளவில் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் இரண்டு பேரைச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவர்களுள் 62 வயது தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டப்போது அவர் சுயநினைவின்றி இருந்தார்.
சிகிச்சைப் பலனின்றி பின்னர் அவர் மாண்டார்.
47 வயது பயணியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் சுயநினைவுடன் இருந்ததை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
ஸ்டொம்ப் தளம் பதிவேற்றிய காணொளியில் வெள்ளை தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதியது தெரிகிறது. பேருந்துக்குமுன் ஒரு மரம் வேரோடு சாய்ந்திருக்கிறது.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

