இணைப்புப் பேருந்தை வழிமறித்து உதைத்த ஆடவர் கைது

1 mins read
3ca0e3df-abad-48ea-b825-84e54ed72e05
தம்மை நோக்கி ஆடவர் வசைபாடியபோது, பேருந்தை அங்கிருந்து ஓட்டிச் செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றார். அப்போது அந்த ஆடவர் பேருந்தின் முன்கதவை உதைத்து தமது கைப்பேசியை அதன்மீது வீசினார். - படம்: பிக்சாபே

சாங்கி விமான நிலையத்தின் இணைப்புப் பேருந்தை வழிமறித்து உதைத்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து ஓட்டுநரை அந்த 30 வயது ஆடவர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்தது.

அந்தத் தனியார் வாடகை கார் ஓட்டுநர் அந்தப் பேருந்தைத் தமது காரில் மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து, பிறகு சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ன் பேருந்து புறப்பாடு நிலையத்தில் வழிமறித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏர்போர்ட் பொலிவார்டில் அந்தப் பேருந்து சாலைத் தடம் மாறியது தொடர்பாக அந்த ஆடவர் அதிருப்தி அடைந்ததாக புதன்கிழமை (மார்ச் 12) காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

பேருந்தை வழிமறித்த பிறகு, காரிலிருந்து வெளியேறி அந்த ஆடவர் பேருந்து ஓட்டுநரை நோக்கி தகாத செய்கைகளைக் காட்டியதாகவும் வசை பாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேருந்தை அங்கிருந்து ஓட்டிச் செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றபோது அந்த ஆடவர் பேருந்தின் முன்கதவை உதைத்து தமது கைப்பேசியை அதன்மீது வீசினார்.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த ஆடவர் சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் மீது மார்ச் 14ல் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்