சிங்கப்பூரின் தனியார் வீட்டு விலைகள் ஐந்து காலாண்டுக்குப் பிறகு முதல்முறை வீழ்ச்சி கண்டுள்ளன.
செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 1.1 விழுக்காடு இறங்கியதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னோடி மதீப்பீடுகள் காட்டின.
அந்த மதிப்பீடுகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) வெளியிடப்பட்டன.
அடிப்படை மத்திய வட்டாரத்தில் அதிகமாக 1.5 விழுக்காடு விலைகள் சரிந்தன. இரண்டாம் காலாண்டில் 0.9 விழுக்காடு பதிவான ஏற்றத்திற்குப் பிறகு அந்த விலை சரிவு ஏற்பட்டது.
2023 இரண்டாம் காலாண்டில் இருந்து தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தனியார் வீட்டு விலைகள் தற்போது முதல்முறை இறங்கி உள்ளது.
கடந்த ஆண்டில் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 3.9 விழுக்காடு விலை ஏற்றம் பதிவானது. 2022ஆம் ஆண்டில் அதைவிட அதிகமாக 8.2 விழுக்காடு உயர்ந்தது.
ஆயினும், இவ்வாண்டின் ஒன்பது மாதங்களில் 1.1 விழுக்காடு என்ற அளவிலேயே தனியார் வீட்டு விலைகள் ஏறின.
விற்பனை ஆன தனியார் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 15.9 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
2023 மூன்றாம் காலாண்டில் 5,201 வீடுகள் விற்பனை ஆன நிலையில், இவ்வாண்டு அதேகாலகட்டத்தில் 4,372 வீடுகளே கைமாறின.
மேலும், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் விற்கப்பட்ட 4,915 வீடுகளைக் காட்டிலும் இது குறைவு.