தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களை மானபங்கம் செய்ததாக ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

1 mins read
491de3b5-1a0c-49b7-9070-5b08e3196e0c
படம்: - தமிழ்முரசு

2014க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலங்களில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவனை மானபங்கம் செய்ததாகத் தனியார் ஆசிரியர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த 57 வயது ஆசிரியரின் பெயர் சௌ கும் சோய்.

நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு மே மாதம் பாதிக்கப்பட்ட அந்த மாணவன் அளித்த வாக்குமூலத்தில், தான் அக்காலக்கட்டத்தில் 10 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டிருந்ததாகவும் தான் மானபங்கம் செய்யப்படுவதை அறியவில்லை எனவும் தெரிவித்தான்.

சக நண்பர்களுடன் பேசிய பிறகு தான் தெரிந்தது சோய் மற்றவர்களுடனும் தவறாக நடந்துகொண்டார் எனக் கூறினான். பின்னர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபமாயிண.

அவர்மீது மற்றோர் சிறுவனை மானபங்கம் செய்ததற்காகவும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது எனச் சொல்லப்பட்டது.

வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்