வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த $570,000 வழங்கப்பட்டது

வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த $570,000 வழங்கப்பட்டது

1 mins read
285bfaa6-2d0a-4ab2-b280-a4dc84bca68a
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னைய படம் -

வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த உதவும் சிங்கப்பூர் உலகளாவிய கட்டமைப்பு நிதித்திட்டம், ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டுக்கும் டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்கும் இடையே ஏறக்குறைய $570,000 தொகையை வழங்கியதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் கிட்டத்தட்ட 300 நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்தது. கருத்தரங்குகள், விழாக்காலக் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் உடனான உறவையும் தொடர்பையும் வலுப்படுத்த இத்தகைய முயற்சிகள் உதவுவதாக திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்கள் அதிகமானோர் வசிக்கும் ஆஸ்திரேலியா, சீனா,

பிரிட்டன், அமெரிக்கா போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ 25,000 பேரை இத்திட்டம் சென்றடைந்துள்ளது.

சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் தொடர்புகளை வலுப்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் சமூகத்தினருக்காக சிங்கப்பூர் உலகளாவிய கட்டமைப்பு 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.