சொத்து முகவர் சட்டத்தின்கீழ் புதிய விதிமுறைகள் ஜூலை 1ஆம் தேதி நடப்புக்கு வந்தன. சொத்து முகவர்களும் நிறுவனங்களும் விண்ணப்பங்களை இன்னும் கடுமையாகச் சரிபார்க்கவேண்டும்.
ஆயினும், சொத்து முகவர்களுக்கான மன்றம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து அந்தக் காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தரநிலைகள் மறுஆய்வு செய்யப்படுவதற்குமுன் சொத்து முகவர்களும் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களைத்தான் சரிபார்க்கவேண்டும்.
ஆனால், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புக்குப் பிறகு சொத்து முகவர்களும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் விவரங்களையும் தாண்டி ஒப்பந்தத்தில் இடம்பெறாத தரப்பினரின் விவரங்களையும் சரிபார்க்கவேண்டும்.
மாற்றங்கள் அனைத்தும் அனைத்துலகத் தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாகச் சொத்து முகவர் மன்றம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சொன்னது.
தனியார் சொத்துகளை வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்கும் எங்கிருந்து பணம் வருகிறது என்பதையும் சொத்து முகவர்கள் சரிபார்க்கவேண்டும்.
சொத்து நிறுவனங்கள் கொள்கை மாற்றத்தை ஆதரித்தாலும் சொத்து முகவர்கள் ஒவ்வொருநாளும் கையாளும் விண்ணப்பங்களுக்குப் புதிய நடைமுறையைப் பின்பற்றுவதில் சவால்களைச் சந்திப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, வீட்டிற்கான நிதி எங்கிருந்து வருகிறது போன்ற சர்ச்சைக்குரிய தகவலைத் திரட்டுவது ஆகப் பெரிய சவாலாகச் சொத்து முகவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
புரோப்நெக்ஸ் போன்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், சொத்து முகவர்களுடன் ஒத்துழைக்க எந்தவிதக் கட்டாயமும் இல்லை என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டனர்.
புதிய விதிமுறையின்படி, சொத்து விற்பவரைப் பிரதிநிதிக்கும் முகவர்கள் வாங்குவோரின் விவரங்களையும் பெறவேண்டும். ஆனால், சொத்து வாங்குவோரைப் பிரதிநிதிக்கும் முகவர் அந்த விவரங்களைத் தரத் தயங்கலாம் என்று முகவர்கள் கூறினர்.