தாயாரின் சொத்துக்கு உரிமை கோரிய சகோதரர்கள்; வழக்கில் வென்ற இளைய மகன்

தாயாரின் சொத்துக்கு உரிமை கோரிய சகோதரர்கள்; வழக்கில் வென்ற இளைய மகன்

1 mins read
588e4325-f399-4dcf-aab9-b9bdf4821173
தாயாரின் ஆவணக் குறிப்புப்படி கின்னுக்கு வீட்டில் 50 விழுக்காட்டு உரிமை உண்டு என்று நீதிபதி தீர்ப்பளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வர்த்தகர் லிம் சி எங், 72, தமது இளைய சகோதரர் லின் சி கின், 61, தொடுத்த சொத்து வழக்கில் தோல்வியுற்றார்.

எங்குடன் சேர்த்து அவரது பெற்றோருக்கு எட்டுப் பிள்ளைகள்.

யூனோசில் உள்ள கின்னின் குடும்ப வீட்டின் மதிப்பு 9 மில்லியன் வெள்ளி.

1992ஆம் ஆண்டு கின்னின் தந்தை காலமானார். அதன்பிறகு அந்த வீடும் நிலமும் கின்னின் தாயாருக்குச் சொந்தமாயின.

மற்ற உடன்பிறப்புகள் அனைவரும் அந்த வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால் எங் தனது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தார்.

2008ஆம் ஆண்டு எங் தனது தாயாருடன் சென்று வீட்டில் 50 விழுக்காட்டு உரிமையைத் தனக்கும் தன் மனைவிக்கும் பதிவு செய்தார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு மற்ற 50 விழுக்காட்டு உரிமையைக் கின்னுக்கும் அவரது மகன்களுக்கும் தாயார் பதிவு செய்தார்.

2023ஆம் ஆண்டு தாயார் காலமான பிறகு எங், முழு வீட்டையும் தனக்குத் தருமாறு கின்னைக் கேட்டார். அதை ஏற்க கின் மறுத்தார்.

மேலும் தாம் 1992ஆம் ஆண்டு 570,000 வெள்ளி செலுத்தி முழு வீட்டையும் வாங்கியதாக எங் கூறினார்.

அதன்பிறகு கின் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி 570,000 வெள்ளி செலுத்தி முழு வீட்டையும் வாங்கியதற்கு எந்தச் சாட்சியும் இல்லை என்றார்.

தாயாரின் ஆவணக் குறிப்புப்படி கின்னுக்கு வீட்டில் 50 விழுக்காடு உரிமை உண்டு என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்