அனைத்து உணவு, பானக் கிளைகளையும் மூடிய ‘த பிரோவிடோர்’ நிறுவனம்

அனைத்து உணவு, பானக் கிளைகளையும் மூடிய ‘த பிரோவிடோர்’ நிறுவனம்

2 mins read
51076408-5c65-4896-bf5f-e17ce6e23aac
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையில் 2013ஆம் ஆண்டு கால்பதித்த ‘த பிரோவிடோர்’ நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாகக் கூறியது. - படம்: த பிரோவிடோர்

உணவு, பானங்களுடன் பலசரக்குப் பொருள்களையும் விற்பனை செய்துவந்த உள்ளூர் நிறுவனமான ‘த பிரோவிடோர்’, அனைத்துக் கிளைகளின் செயல்பாடுகளையும் நிறுத்திக்கொள்வதாகத் திங்கட்கிழமை (மார்ச் 9) அறிவித்துள்ளது.

இன்ஸ்டகிராமில் அதுகுறித்து தெரிவித்த நிறுவனம், செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

‘த பிரோவிடோர்’ நிறுவனத்துக்கு டவுன்டௌன் கெலரி, மெண்டரின் கெலரி, பாய லேபார் குவாட்டர், ராஃபிள்ஸ் பிளேஸ், விவோசிட்டி, விஸ்மா ஏட்ரியா ஆகியவற்றில் ஆறு கிளைகள் இருந்தன.

ஆயர் ராஜாவில் ‘த பிரோவிடோர்’ நிறுவனம் வைத்திருந்த கிடங்கு ஒன்றில் சில்லறை விற்பனைப் பொருள்களுக்கான தனிப் பகுதியும் இருந்தது. அதன் தலைமை அலுவலகமும் அங்குச் செயல்பட்டது.

தற்போது ‘த பிரோவிடோர்’ நிறுவனத்தின் ஆயர் ராஜா கிடங்கும் தலைமை அலுவலகமும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகக் கூகல் வரைபடம் காட்டுகிறது.

கிடங்கின் சில்லரை வர்த்தகப் பகுதி 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மூடப்பட்டுவிட்டதாகவும் நிறுவனத்தின் இணையத்தளத்தில் காண முடிகிறது.

இன்ஸ்டகிராமில் செயல்பாடுகளை நிறுத்தும் தனது முடிவை அறிவித்த நிறுவனம், நீண்டகாலமாக ஆதரவளித்து கணிவுடன் நடந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.

விரைவில் வாடிக்கையாளர்களை எதிர்காலத்தில் சந்திப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘த பிரோவிடோர்’ நிறுவனம் சிங்கப்பூரில் கால் பதித்த முதல் சில உணவு, பானக் கடைகளில் ஒன்று.

குறுகிய காலத்தில் அலுவலகத்துக்குச் செல்வோரிடையே நிறுவனத்தின் உணவு, பானக் கடைகள் தனி முத்திரை பதிக்கத் தொடங்கின.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்கு ஆண்ட்கள் கழித்து ரேஃபிள்ஸ் சிட்டியில் உள்ள கிளையை நிறுவனம் மூடியது.

அதே ஏப்ரல் மாதம், ‘த பிரோவிடோர்’ நிறுவனம் புதிய உரிமையாளர்களிடம் விற்கப்பட்டதாக ஆசிய பசிபிக் உணவு நிறுவன அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்