சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அங் யோங் குவான் அடுத்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அவரது கட்சி புதன்கிழமை (பிப்ரவரி 5) அறிக்கை வெளியிட்டுள்ளது.
70 வயதான அங், மனநல மருத்துவர். அவர் சேவையில் ஈடுபட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை கட்சி வெளியிட்டது.
மனநல மருத்துவராக இருந்தபோது அவர் அலட்சியமாக நடந்து கொண்டார். அதனால் ஒருவர் மாண்டார். அதற்கு தண்டனையாக அவருக்கு மூன்று ஆண்டு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் திரு அங், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கும் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று கடந்த மாதமே தெரிவித்துவிட்டதாக பேச்சாளர் கூறினார்.
திரு அங்கின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
திரு அங் மீதான விசாரணை கடந்த ஆண்டு மே மாதம் முடிந்தது. அவர் குற்றம் செய்தது உறுதியானது.
அங், 2012ஆம் ஆண்டு தமது நோயாளி ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகளைத் தந்தார். அதை உண்ட நோயாளி நான்கு நாள்களுக்குப் பிறகு மாண்டார்.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் அங் மூன்று முறை பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
டாக்டர் அங், 35 ஆண்டுகளுக்கு மேலாக மனநல மருத்துவராகப் பணியாற்றியுள்ளார் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.