பொதுமக்கள் பூமலையில் மரங்களை அலங்கரிக்கலாம்

பொதுமக்கள் பூமலையில் மரங்களை அலங்கரிக்கலாம்

படம்: தேசிய பூங்காக் கழகம்

20 Oct 2026 - 9:20 pm

1 mins read

பூமலையில் தனிநபர்கள், குடும்பங்கள், அமைப்புகள், சமூக அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட 250 மரங்கள் வரும் டிசம்பர் 5 முதல் 2027 ஜனவரி 3 வரை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

தேசிய பூங்காக் கழகத்தின் ‘கார்டன்ஸ்-ஏ-க்ளோ’ என்ற ஆண்டிறுதி விழாவையொட்டி இந்த அலங்காரம் இடம்பெறுகிறது.

தங்ளின் நுழைவாயில் முதல் புக்கிட் தீமா நுழைவாயில்வரை அலங்கரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மரங்களைக் காட்சிப்படுத்தும் பூங்காவின் பாரம்பரிய நிகழ்வான ‘உலக மரங்கள்’ திட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

இலவச மர அலங்காரம் நவம்பர் 14 முதல் நவம்பர் 29 வரை பூமலையில் நடைபெறும்.

இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 30ஆம் தேதி go.gov.sg/gardensaglow-reg எனும் இணையப்பக்கத்தில் பதிவுசெய்யலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறது. - படம்: தேசிய பூங்காக் கழகம்

பொதுமக்கள் தேசிய பூங்காக் கழகத்தின் தொண்டு நிறுவனமான ‘கார்டன் சிட்டி நிதியத்தின்’ வாயிலாக நன்கொடையும் அளிக்கலாம். நன்கொடைகள் கழகத்தின் ஆய்வு, இயற்கைப் பாதுகாப்பு, இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், சமூகத் திட்டங்களுக்குப் பயன்படும். $800 அல்லது அதற்குமேல் நன்கொடை அளிப்பவர் ஒரு மரத்திற்கு ஆதரவளித்து, அதை அலங்கரிக்கலாம்.

இலவச மர அலங்காரம் நவம்பர் 14 முதல் நவம்பர் 29 வரை பூமலையில்நடைபெறும்.
இலவச மர அலங்காரம் நவம்பர் 14 முதல் நவம்பர் 29 வரை பூமலையில்நடைபெறும். - படம்: தேசிய பூங்காக் கழகம்

நன்கொடை அளிக்க விரும்புவோர் go.gov.sg/gardensaglow-donate என்ற இணையத்தளத்தை நாடலாம்.

ஜனவரி 3ஆம் தேதிக்குப் பிறகு, அலங்கரிக்கப்பட்ட மரங்கள் சிங்கப்பூரின் இயற்கை நிலப்பரப்பை மேம்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு பூங்காக்களிலும் பசுமை இடங்களிலும் நடப்படும்.

குறிப்புச் சொற்கள்