மின்வாகன பொது மின்னேற்றச் சேவை விலை அதிகமாகலாம்: புதிய விதிமுறைகளால் இந்நிலை

1 mins read
41a10b91-b8c3-4f6a-9fcb-038381ec3238
வருகின்ற 2024க்குள் பொது மின்னேற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள், கியுஆர் கோட் வருடல், கடன் அட்டை, கைத்தொலைபேசிச் செயலி, இதர கட்டண அட்டைகள் சேவை போன்றவற்றைப் வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.  - படம்:தி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின் வாகனங்களுக்கு மின்னேற்றச் சேவை (சார்ஜிங்) வழங்கும் நிறுவனங்களுக்கான பதிவு, உரிமம் ஆகிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மின்னேற்ற சேவையை வர்த்தக ரீதியில் வழங்கும் நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்துள்ளது. எனவே அதில் ஒரு பங்கை வாடிக்கையாளர்களான வாகன ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனங்களில் சில தெரிவித்துள்ளன.

கடந்த டிசம்பர் 8 முதல் நடப்புக்கு வந்த மின்னேற்ற சட்டத்தின்படி, புதிதாக மின்னேற்றம் செய்துகொள்ளும் வாகன ஓட்டுநர்கள் ஒரு கட்டணத்தை செலுத்தி நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் அவர்களது வாகனங்களைப் பதிவுசெய்திருக்க வேண்டும். 2024 டிசம்பர் 7ம் தேதிக்குள், புதிதாக மின்னேற்ற சேவையை வர்த்தகமாகத் தொடங்கியுள்ள அனைத்து நிறுவனங்களும் நில போக்குவரத்து ஆணையத்துடன் ஒரு கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்