எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாளான சனிக்கிழமை, மே 3ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்படுவதாக மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது.
வாக்களிப்பு நாள், ஊழியருக்கு வேலை நாள் இல்லையென்றால், வேறொரு ஓய்வு நாள் பெறவோ அன்றைய தினத்துக்குச் சம்பளம் பெறவோ அவருக்கு உரிமையுண்டு. ஓய்வு நாள் குறித்து முதலாளிகளும் ஊழியர்களும் கலந்தாலோசித்துக்கொள்ள வேண்டும். ஆனால், அது இயல்பாகவே திங்கட்கிழமையாக (மே 5) இருக்காது.
மேல்விவரங்களுக்கு https://www.tamilmurasu.com.sg/general-election-2025

