தேர்தல் கருத்தாய்வுகள், விளம்பரங்களை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையம்

1 mins read
d9f28d95-55fd-4275-8bd4-10e34457e336
வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே கட்டணத்துடன் கூடிய இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிடலாம் என்று ஆணையம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் காலகட்டத்தின்போது தேர்தல் தொடர்பான கருத்தாய்வுகள் அல்லது கருத்துக்கணிப்புகள் எதனையும் வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

தேர்தல் கருத்தாய்வு என்பது தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் அல்லது வாக்காளர்கள் எந்தெந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதைக் கோடிக்காட்டும் ஒன்றாகும்.

கருத்துக்கணிப்பு என்பது வாக்காளர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதன் தொடர்பிலான எந்தவோர் அறிக்கையாகவும் இருக்கலாம் அல்லது தேர்தல் தொடர்பான முன்னோட்ட முடிவுகளை வெளிப்படுத்தும் ஓர் அறிக்கையாகவும் அமையலாம்.

வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே கட்டணத்துடன் கூடிய இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிடலாம் என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர் அல்லாதோர், வேட்புமனுத் தாக்கல் நாளைத் தொடர்ந்து வேட்பாளரிடமிருந்து அல்லது தேர்தல் முகவரிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதி பெற்றால் மட்டுமே கட்டணத்துடன் கூடிய இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிடலாம்.

கட்டணம் செலுத்தப்பட்ட அனைத்து விளம்பரங்களைப் பற்றியும் வேட்பாளர் அல்லது தேர்தல் முகவர், தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். அவை தற்போதுள்ள தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.

குறிப்புச் சொற்கள்