தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை

1 mins read
efe9d97b-15e6-48d4-a631-27ecc20cb831
இரண்டு வாரங்களுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 முதல் 7 காசுகள் வரை உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரபலமான 95 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு $3ஐ நெருங்கியது.

இங்குள்ள ஐந்து பெட்ரோல் நிறுவனங்களில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாக உள்ளதாய் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ‘ஃபியுவல் காக்கி’ இணையத்தளம் கூறியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் விலைகள் லிட்டருக்கு 4 முதல் 7 காசுகள் வரை அதிகரித்திருப்பதாகவும், டீசல் விலைகள் லிட்டருக்கு 8 முதல் 16 காசுகள் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆக அண்மையில் பெட்ரோல் விலையை அதிகரித்திருக்கும் நிறுவனம், சினோபெக். இரண்டு வாரங்களுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அது பெட்ரோல் விலையை 7 காசுகள் கூட்டியது. டீசல் விலை 16 காசுகள் அதிகரிக்கப்பட்டது.

மற்ற நிறுவனங்கள் இந்த வாரத் தொடக்கத்தில் பெட்ரோல் விலைகளை அதிகரித்தன.

விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், 95 ரக பெட்ரோல் விலை செப்டம்பருக்குள் $3ஐத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்