காற்றுபோகாத பிளாஸ்டிக் போத்தல் டயர் பரிசோதனை

காற்றுபோகாத பிளாஸ்டிக் போத்தல் டயர் பரிசோதனை

1 mins read
91dad293-33fb-44e0-a4ad-fb45592d5e39
மிஷலின் நிறுவனத்தின் காற்று இறங்காத டயர் டிஎச்எல் எக்ஸ்பிரஸ் வாகனம் ஒன்றில் பொருத்தப் பட்டு இருக்கிறது. படம்: ஃபேஸ்புக் -

மறுசுழற்சி தொட்டிகளில் போடப்படும் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு காற்று இறங்காத வாகன டயர்களைத் தயாரித்து அதைப் பரிசோதித்து பார்க்கும் நடைமுறை இப்போது சிங்கப்பூரில் உள்ளது.

மிஷலின் என்ற பிரான்ஸ் டயர் தயாரிப்பு நிறுவனம், சிங்கப்பூரில் டிஎச்எல் எக்ஸ்பிரஸ் என்ற தளவாடப் போக்குவரத்து நிறுவனத்துடன் சேர்ந்து அந்தத் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கிறது.

பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் டயர் காற்று போகாத ஒன்று என்பதால் வாகன ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்து இருக்கும் மிஷலின், இந்த டயர்களை 2024 முதல் விற்கலாம் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இதனிடையே, அந்தப் பரிசோதனை பற்றி தனக்குத் தெரியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

பொருத்தமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆணையம் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.