தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே ஒருவருக்கு $5.8 மில்லியன் 'டோட்டோ' பரிசு

1 mins read
78c22d52-0d75-46e9-953b-7a1203dc1d87
தெக் வாயில் அமைந்துள்ள 'சிங்கப்பூர் பூல்ஸ்' கிளை. படம்: கூகல் மேப்ஸ் -

திங்கட்கிழமை (மார்ச் 13) நடைபெற்ற 'டோட்டோ' குலுக்கலில் மாபெரும் அதிர்ஷ்டசாலி ஒருவர் $5.8 மில்லியனைத் தட்டிச்சென்றார்.

தெக் வாய் லேனில் உள்ள 'சிங்கப்பூர் பூல்ஸ்' கிளையில் 'சிஸ்டம் 9' குலுக்கல் சீட்டை அவர் வாங்கியிருந்தார். அதன் விலை $84.

இதற்கிடையே, இரண்டாம் பரிசை (குரூப் 2) வென்ற எழுவருக்குத் தலா $85,478 கிடைத்தது. ஹவ்காங் உட்பட தீவின் வெவ்வேறு பகுதிகளில் 'குரூப் 2' குலுக்கல் சீட்டுகள் வாங்கப்பட்டிருந்தன.

திங்கட்கிழமை நடைபெற்ற குலுக்கலில் 1, 3, 15, 18, 23 மற்றும் 48 வெற்றி எண்களாகத் தேர்வுசெய்யப்பட்டன. உபரி எண் 41.

இவ்வாண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடந்த டோட்டோ குலுக்கலுக்காக, தெக் வாயில் உள்ள அதே சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் குலுக்கல் சீட்டு வாங்கியவருக்கு 'குரூப் 2' பிரிவில் $78,156 கிடைத்தது. 'குவிக்பிக் ஆர்டினரி' குலுக்கல் சீட்டை அவர் வாங்கியிருந்தார்.