டோட்டோ முதல் பரிசு $12 மில்லியன்; பிப்ரவரி 23ஆம் தேதி குலுக்கல்

டோட்டோ முதல் பரிசு $12 மில்லியன்; பிப்ரவரி 23ஆம் தேதி குலுக்கல்

1 mins read
a9cc7ebf-fe6b-4bd8-8e64-4ccd14d8b5a8
‘அங் பாவ்’ டோட்டோ குலுக்கலில் பங்கேற்று, பெரும்பரிசை வெல்ல விரும்புவோர் குறைந்தது $10 கொண்ட பரிசுச்சீட்டுத் தொகுப்புகளை வாங்க வேண்டும். - கோப்புப்படம்: எஸ்பிஎச்

இவ்வாண்டிற்கான ‘அங் பாவ்’ டோட்டோ பரிசுக் குலுக்கல் பிப்ரவரி 23ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

அக்குலுக்கலின் முதல் பரிசு $12 மில்லியன்.

அந்த வருடாந்தர மாபெரும் பரிசுக் குலுக்கலுக்கான சீட்டு விற்பனை பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6.10 மணியிலிருந்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் தொடங்கும்.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்று, பெரும்பரிசை வெல்ல விரும்புவோர் குறைந்தது பத்து வெள்ளிக்கான பரிசுச்சீட்டுத் தொகுப்புகளை வாங்க வேண்டும்.

அதனுடன், மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ‘சிங்கப்பூர் சுவீப்’ பரிசுச்சீட்டும் இருக்கும்.

வெற்றிக்கான ஏழு இலக்க எண் கொண்ட சிங்கப்பூர் சுவீப் பரிசுச்சீட்டு வைத்திருப்போருக்கு $2.3 மில்லியன் பரிசாகக் கிடைக்கும்.

கடந்த 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அங் பாவ்’ டோட்டோ குலுக்கலில் மூவர் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு ஆளுக்கு $4.27 மில்லியன் கிடைத்தது. வெற்றி எண்கள்: 4, 6, 21, 25, 34 மற்றும் 40.

குறிப்புச் சொற்கள்