தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்க நடனக்குழு தேடித்தந்த அதிர்ஷ்டம்: 4D குலுக்கலில் சிலருக்கு $20,000 வரை பரிசு

1 mins read
02d4ccd2-dbcf-46e5-ae9b-1800b809e037
0707 என்ற எண்ணை வெவ்வேறு விதமாக வரிசைப்படுத்தி, தான் வாங்கிய குலுக்கல் சீட்டைக் காட்டும் ஒருவர். படம்: ஷின் மின் -
multi-img1 of 3

சிங்க நடனக்குழுக்கள் தங்களுடைய படைப்புகளுக்குப் பிறகு அதிர்ஷ்டக் குலுக்கல் எண்களை விட்டுச்செல்வது சிங்கப்பூரில் வழக்கமான ஒன்று.

ஆனால், அவற்றைக் கொண்டு 4D குலுக்கல் சீட்டுகளை வாங்குவோர், 'லாட்டரி'யில் வெல்வது அவ்வளவு வழக்கமானது அல்ல.

அண்மையில் உட்லண்ட்சில் சில கடைக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. சிங்க நடனக்குழு ஒன்று விட்டுச்சென்ற 4D எண்ணை அவர்கள் வாங்கினர். மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள், அன்னாசிப் பழத் தோல், வெங்காயத்தாள், வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு 'அதிர்ஷ்ட எண்கள்' விட்டுச்செல்லப்பட்டன.

அந்த எண்ணில் வெவ்வேறு வரிசைகளில் அவர்கள் குலுக்கல் சீட்டுகளை வாங்கினர். பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற 4D குலுக்கலில் சில அதிர்ஷ்டசாலிகள் முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். அவர்கள் வென்றது பல்லாயிரம் வெள்ளி. சற்று பெரிய தொகையைச் செலுத்தி பந்தயம் கட்டிய சிலர் $20,000 வரை வென்றதாகக் கூறப்படுகிறது.

அந்தக் குலுக்கலில் முதல் பரிசுக்கான எண் 7070. அந்தச் சிங்க நடனக்குழு விட்டுச்சென்ற எண்ணை வெவ்வேறு விதமாக வரிசைப்படுத்திப் பார்த்தால் வரும் எண்களில் இந்த வெற்றி எண்ணும் அடங்கும்.

இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவது அரிது என்பதால், பந்தயம் கட்டுவோர் பொறுப்புடன் பந்தயம் கட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது.