ஜூரோங் ஈஸ்ட் அழகு நிலையங்களில் சோதனை; 19 பெண்கள் கைது

ஜூரோங் ஈஸ்ட் அழகு நிலையங்களில் சோதனை; 19 பெண்கள் கைது

1 mins read
89cf6cb2-4f08-49dc-845d-6d361ec2a2ae
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 மற்றும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31ல் உள்ள அழகு பராமரிப்புக் கூடங்களிலும் உடற்பிடிப்பு நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 19 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் விலைமாதர் தொடர்பான நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை வியாழக்கிழமை (மே 7) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இதர ஐவர், வேலை அனுமதி தொடர்பான விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.

அதிகாரிகளின் அமலாக்கச் சோதனை நடவடிக்கைகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டன.

இரண்டு பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களிலும் மூன்று உடற்பிடிப்பு நிலையங்களிலும் பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் காவல்துறை கூறியது.

கைது நடவடிக்கை தவிர, உரிமம் இன்றி உடற்பிடிப்புச் சேவைகள் வழங்கியது தொடர்பாக ஏழு நிறுவனங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.

மற்றொரு நிறுவனம் உரிமம் பெற்றிருந்தபோதிலும், தனது ஊழியர்கள் பாலியல் சேவைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்யத் தவறியதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 மற்றும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31ல் உள்ள அழகு பராமரிப்புக் கூடங்களிலும் உடற்பிடிப்பு நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அண்மைய மாதங்களில், அதுபோன்ற இடங்களில் விலைமாதர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவது அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறை, சுகாதார அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்