ரயில்வே பணிக்குழுவின் பரிந்துரைகளில் கூடுதல் தரவுப் பாதுகாப்பு முறைகள் அடங்கும்

2 mins read
f2365302-afe3-4aa9-a2b9-4c5267922633
ரயில்கள், சிமிக்ஞை, மின் கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் முக்கிய அமைப்புகள் என்றும் அவற்றின் புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைத்தது. - பட்ம: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராயும் ஒரு பணிக்குழு தனது அறிக்கையைப் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்விடம் சமர்ப்பித்துள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் ரயில் நிறுவனங்களான எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றின் மூத்த தலைவர்களைக் கொண்ட இந்தக் குழு, தொழில்துறை நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், ஜூலை, செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்பட்ட பல்வேறு ரயில் தடங்கல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் தொடர்பில்லாதவை என்பதைக் கண்டறிந்தது.

இருப்பினும், மேம்பாடு செய்யப்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன என்று ஆணையமும் ரயில் நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தன.

ஒரு பரிந்துரை, கூடுதல் தரவுப் பபாதுகாப்பு மற்றும் சிறிய தவறுக்குப் பிறகு ரயில் செயல்பாடுகளை விரைவாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் செயல்முறைகள் ஆகும்.

ரயில்கள், சிமிக்ஞை, மின் கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் முக்கிய அமைப்புகள் என்றும் அவற்றின் புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைத்தது.

இந்த அமைப்புகளைப் புதுப்பிக்கத் தேவையான நேரத்தையும் குறைக்க வேண்டும் என்றும் இதை அடைய அதிக பொறியியல் பணிநேரங்களை ஒதுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் முழு நாள் சேவை நிறுத்தங்களும் அடங்கும்.

தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் பயன்பாடும் வலியுறுத்தப்பட்டது. பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது ரயில் ஊழியர்களின் பணியைச் சிறப்பாகச் செய்ய தானியக்க முறையைப் பயன்படுத்துவதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.

அறிக்கை கிடைத்ததை உறுதிப்படுத்தி, போக்குவரத்து அமைச்சு கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து 2026 முதல் காலாண்டிற்குள் பரிந்துரைகளுக்கு முழு பதிலை வழங்கும் என்று டிசம்பர் 30ஆம் தேதி அன்று ஃபேஸ்புக்கில் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் பதிவிட்டார்.

நிலப் போக்குவரத்து ஆணையத் தலைமை நிர்வாகி இங் லாங் தலைமையிலான பணிக்குழுவில் எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாகி நியன் ஹூன் பிங், எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் ஆகியோரும் உள்ளனர்.

“சிங்கப்பூர் வேகமான ரயில் கட்டமைப்பு விரிவாக்கத்துடன், பழையதாகி வரும் ரயில் பாதைகளையும் கையாள்வதில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கியமான நேரத்தில் பணிக்குழுவின் பரிந்துரைகள் வருகின்றன,” என்று திரு இங் கூறினார்.

“ரயில் கட்டமைப்பை இயக்குவதிலும் பராமரிப்பதிலும் உள்ள சவால், அதன் அளவு மற்றும் சிக்கலான தன்மை கூடும்போது அதிகரிக்கும். இந்தப் பரிந்துரைகள் நமது ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து வலுப்படுத்த எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட உதவும்,” என்று திரு இங் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்