தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
1c6e3758-dda9-4d16-b105-5a95acb18fa5
பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசுக்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வரும் நாள்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் சில நாள்களில் இம்மழை இரவு வரை கூடப் பெய்யக்கூடும் என ஆய்வகம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரியை விட அதிகமாக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசுக்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்