பிப்ரவரி 19 ரமலான் நோன்பு தொடங்குகிறது

பிப்ரவரி 19 ரமலான் நோன்பு தொடங்குகிறது

1 mins read
4f4fcd46-072b-45f4-974d-5a156d93dd58
புனித ரமலான் மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள முஸ்­லிம்­கள் பிப்ரவரி 19ஆம் தேதிமுதல் ரமலான் நோன்பிருக்கத் தொடங்கலாம் என்று முஃப்தி அறிவித்துள்ளார்.

வானி­யல் கணக்­கீடுகளின்­படி, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) சூரி­யன் மறைவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னரே பிறை மறைந்துவிட்டது என்று சிங்கப்பூர் முப்தி டாக்டர் நஸ்ருதீன் முகம்மது நசீர் தெரிவித்தார்.

அதாவது, இஸ்லாமிய நாட்காட்டியின்படி 30 நாள்களுடன் பிப்ரவரி 18ஆம் தேதி ‌‌‌ஷாபான் மாதம் நிறைவடைகிறது. அதனால், புனித ரமலான் மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குவதாக அவர் அறிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் அனைவர்க்கும் போற்றுதலுக்குரிய ரமலான் மாத வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார். அத்துடன், தொழுகை, நன்றியுணர்வு, அறப்பணிகள் மூலம் முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையையும் இறைப்பற்றையும் வலுப்படுத்திக்கொள்ள இந்தப் புனித மாதத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்