பிரதமர் லாரன்ஸ் வோங், புனித ரமலான் நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன்பு, சிங்கப்பூர் முஸ்லிம்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். புதன்கிழமை (பிப்ரவரி 18) ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காணொளியில், பிரதமர் ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் பேசினார்.
“நடந்தவற்றைச் சிந்தித்துப் பார்ப்பதற்கும் புதுப்பித்துக் கொள்வதற்குமான இந்தக் காலம் உங்கள் இல்லங்களுக்கு அமைதியையும் அனைவருக்கும் ஆசிர்வாதங்களையும் கொண்டுவரட்டும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள், புனித ரமலான் மாதத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 19) தொடங்குகின்றனர். இவ்வாண்டு நோன்புப் பெருநாள், மார்ச் மாதம் 21ஆம் தேதி.

