தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரமலான், மார்ச் மாதப் பள்ளி விடுமுறை: நிலவழிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

1 mins read
9b3d8a3a-6e83-41fb-be92-109c16ede5cb
உச்ச நேரங்களில் மலேசியாவுக்கு காரில் செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் ரமலான் பண்டிகை மற்றும் மார்ச் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனப் புத்தாண்டு காலத்தில் அதாவது ஜனவரி 24ஆம் தேதிக்கும் ஜனவரி 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நிலவழி எல்லைகளில் சென்றனர்.

ஜனவரி 24ஆம் தேதி மட்டும் 521,000 பயணிகள் நிலவழி எல்லைகளில் பயணம் செய்தனர்.

உச்ச நேரங்களில் மலேசியாவுக்கு காரில் செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மார்ச் மாதப் பள்ளி விடுமுறை 14ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதன்பின்னர் ரமலான் பண்டிகைக்கான விடுமுறைகள் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தொடர்கிறது.

குடிநுழைவு அதிகாரிகளுடன் ஒத்துழைத்து போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளுமாறும் ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

பயணம் மேற்கொள்வதற்கு முன்பு நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நிலவரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுமாறும் பயணிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். சட்டத்தை மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

குறிப்புச் சொற்கள்